புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனதாக அவருடைய பெற்றோர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிறுமியை தொடர்ந்து தேடிவந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதியன்று ஒரு முட்புதருக்குள் சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் உடலில் பல காயங்கள் இருந்தது.
தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன், விசாரணையில் குற்றவாளியான ராஜா(எ) சாமுவேல் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
அந்த வழக்கின் விசாரணை புதுகோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாமுவேலுக்கு மூன்று பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
மேலும் குற்றம் நடந்து ஆறுமாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?