அமெரிக்காவில் 65 வயதான நோயாளியின் இதயத்தில் பல்ஸ் பார்த்தபோது மெக்சிகன் பாடல் ஒன்று இசைப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
65 வயதான அமெரிக்கர் ஒருவருக்கு மருத்துவமனை ஒன்றில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவருக்கு ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா அல்லது சுருங்கி உள்ளனவா என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.
‘டாப்ளர் ஸ்கேன்’ என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கும் ஒரு பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையில் இதயத்திலிருந்து பெறப்படும் ஒலி அலைகளை எக்கோ கருவியில் உள்ள கணினி இருபரிமாணம் அல்லது முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும்.
இந்த ‘டாப்ளர் ஸ்கேன் மூலம் நோயாளியின் காலில் உள்ள துடிப்பை பரிசோதித்தபோது, ஸ்கேனரின் ஸ்பீக்கரில் மெக்சிகன் பாடல் ஒன்று இசைப்பதை கேட்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ‘டாப்ளர் ஸ்கேனை வைத்து அந்த நோயாளியை பரிசோதிக்கும்போது மட்டும் இசை ஒலி கேட்பது எப்படி என்பது மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
நோயாளியின் புரோஸ்டெடிக் இடுப்புகளில் இருந்து பெறப்பட்ட ரேடியோ சிக்னலை டாப்ளர் ஸ்கேன் செய்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?