JUST IN

Advertisement

சுற்றுலா வழிகாட்டியான ஷாருக்கான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான சங்கம் கௌரவ உறுப்பினர் அந்தஸ்தை அளித்துள்ளது. 


Advertisement

சுற்றுலா வழிகாட்டியாக ஷாருக்கான் நடித்திருக்கும் ஜப் ஹேரி மெட் சேஜல் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான், ராஜஸ்தான் சென்றார். ஜோத்பூரில் அவருக்கு ஜோத்பூரி பாரம்பரியப்படி தலைப்பாகை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஜோத்பூர் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தில் ஷாருக்கானுக்கு கௌரவ உறுப்பினர் அந்தஸ்தும் அவருக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ஷாரூக்கான், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் உருவாகியுள்ள ஜப் ஹேரி மெட் சேஜல் திரைப்படம் ஆகஸ்ட் 4ம் தேதி ரிலீஸாகிறது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement