விரைவில் வருகிறது அம்மா இ கிராமம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், அம்மா இ கிராமம் என ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட கம்பியில்லா ஹாட் ஸ்பாட் சேவை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதில், நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில், 150 கால்நடை மருத்துவநிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் புதிதாகக் கட்டப்படும். 93 லட்சத்து 86 ஆயிரம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், தடுப்பூசிகள் போடப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் 20 ஆயிரம் பணியாளர்கள் உடனடியாகப் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். நாகை மாவட்டம் ஒரடியம்பலம் கிராமத்தில் புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும். அதற்காக முதற்கட்டமாக 28 கோடியே 82 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், அம்மா இ கிராமம் என ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட கம்பியில்லா ஹாட் ஸ்பாட், திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement