ரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி தனக்கே தற்போதுதான் தெரியும் என அவரது சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்
வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினியின் அறிவிப்பு குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயணா புதிய தலைமுறைக்கு பேசினார். அதில், ’’ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வருவார். எதையாவது செய்வார் என எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பை தொண்டர்கள் மறப்பது கஷ்டம். ரஜினி கட்சி தொடங்கப்போவது குறித்தெல்லாம் என்னிடம் பேசினார். தற்போது மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று இப்படி முடிவெடுத்துள்ளார். கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி எனக்கே இப்போது தான் தெரியும். பரவாயில்லை. அவரது முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?