தொலைத்தொடா்பு கோபுரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உளிட்ட விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சட்டங்கள் மூலம் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபா்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.
முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன. இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், நேற்று மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 176-க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க முயன்ற அந்நிறுவன ஊழியா்களும் தாக்கப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும், மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, செல்போன் டவர்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் அமரீந்தா் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?