வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் பாரதிராஜாவுக்கு பதில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான அசுரன் பட வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் பாவக்கதைகளில் ஒரு கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் சிறுகதையை எடுத்து சூரியை வைத்து பெயரிடப்படாத புதியப் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கெனவே, இப்படத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது, அவருக்குப் பதில் கிஷோர் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான ’பொல்லாதவன்’ படத்தில் கிஷோரை தமிழுக்கு அறிமுகம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவரின் ஆடுகளம், விசாரணை, வடசென்னையில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் கடும் குளிர் என்பதால் பாரதிராஜா விலகியுள்ளார். அவருக்குப் பதில் தற்போது கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?