பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் அறையே அங்கு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே வேளையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர் முன்னிலையில் 7 பீரோக்களில் 160 பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
சுமார் 35 ஆண்டுகள், நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இளையராஜா எனும் கலைஞன் இசையால் உயிரூட்டிய இடம்தான், சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. பாடல்கள் ஒலிப்பதிவு, பின்னணி இசை என தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இளையராஜாவின் பொக்கிஷப் படைப்புகள் எல்லாம் அங்கிருந்துதான் உருவாகின. இசையமைப்பாளர் இளையராஜாவின் மற்றொரு வீடாகவே இருந்த பிரசாத் ஸ்டூடியோ, அவருக்கு ஒரு கோயிலாகவே இருந்தது எனச் சொல்லலாம்.
பாடல் ஒலிப்பதிவுக்கூடத்துடன் அவருக்கென அங்கு பிரத்யேகமாக 5 அறைகள் இருந்துள்ளன. வாடகை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அந்த பிரச்னை பெரிதானதால், ஸ்டூடியோ நிர்வாகத்தினர் தன்னை வேலை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார் இளையராஜா. ஸ்டூடியோவில் உள்ள தனது அறையை பூட்டிக் கொண்டு வெளியேறிய அவர், மீண்டும் அங்கு செல்லவில்லை.
இந்நிலையில், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதுதொடர்பாக முதலில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பார்த்தப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எந்த அறையில் அமர்ந்து ஒரு நாள் தியானம் செய்வதற்காக இளையராஜா இத்தனை முயற்சி எடுத்தாரோ, அந்த அறையே இல்லை என்றதும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகக் கூறுகின்றனர், இளையராஜாவின் வழக்கறிஞர்கள்.
இந்த நிலையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர்கள் முன்னிலையில், இளையராஜா தரப்பில் கொடுக்கப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது. 7 பீரோக்களில் 160 பொருட்கள் இளையராஜா தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இளையராஜா வருவார் என காத்திருந்ததாகவும், இளையராஜாவுக்கு அவரது தரப்பினர் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் பொருட்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அவரது தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் ஆணையர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தங்களுக்கு மிகப்பெரிய அநீதி நடத்திருப்பதாகக் கூறும் இளையராஜா தரப்பினர், அது தொடர்பாக, கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு