சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், கடந்த பத்து ஆண்டுகால சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என இரண்டு விருதுகளை வென்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
பல நாடுகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
“தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரரான இவரை யாராலும் அடையாளம் காணவே முடியாது” என சொல்லி அதற்கு கேப்ஷனும் போட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய கேப்டன் விராட் கோலியின் முகத்தை ஃபேஸ் அப் மூலம் எடிட் செய்து அதில் வார்னரின் ஒரு பாதி முகத்தை வைத்துள்ளார். மறுபாதியை கோலியாகவே வைத்துள்ளார்.
அதோடு அந்த வீடியோவின் டேக்காக “மிகத்தகுதியான விராட் கோலிக்கு விருது கொடுத்ததற்கு வாழ்த்துகள்” என சொல்லியுள்ளார். மேலும் விளையாட்டாக இதை செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை