அஜித் மனைவி ஷாலினியும் மகன் ஆத்விக்கும் ஹோட்டல் ஊழியருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகை ஷாலினி கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ’அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போது அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐந்து வயதாகும் அஜித் மகன் ஆத்விக் பிறந்த போதிலிருந்தே அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விமான நிலையங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என அஜித்,
ஷாலினியுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் அஜித் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிடுவார்கள். அப்படித்தான், சமீபத்தில் ஷாலினி மகன் ஆத்விக்குடன் சென்னையிலுள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான ஹோட்டல் ஊழியர், இவர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் புகைப்படம் எடுக்க கேட்டவுடன் ஷாலினியும் ஆத்விக்கும் புன்னைகையுடன் ஓகே சொல்லியுள்ளனர். அந்தப் புகைப்படம்தான் வைரல் ஆகி வருகிறது.
தற்போது, வலிமை படத்திற்காக அஜித் ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஷாலினி, ஆத்விக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. புகைப்படத்தில் மஞ்சள் நிற உடையில் ஷாலினியும், பச்சை நிற உடையில் ஆத்விக்கும் ஹோட்டல் ஊழியருடன் போட்டோவுக்கு புன்னகைத்தபடி போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்து ’பையன் நல்லா வளர்ந்துட்டான்’ என்று புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?