சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான எட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.
சென்னை, காரப்பாக்கம் லட்சுமி விநாயகர் தெருவில் தங்கும் விடுதி உள்ளது. அதில், சர்ஜான் ஜார்ஜ், (25) என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த, 24ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை விடுதி முன்பு நிறுத்தியிருந்தார். அந்த வாகனம் திடீரென மாயமானது.
இது குறித்த ஜார்ஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கண்ணகிநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனங்களை திருடியது கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய் (19), சூர்யா (20), பிரித்திவிராஜ் (19), சேவியர் (23), பிரதீப்ராஜ் (19), ஆகியோர் என்பது தெரியவந்தது.
விசாரணையில் இவர்கள், கண்ணகிநகர், மயிலாப்பூர், கோட்டூர்புரம், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பின்னர் ஐவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?