[X] Close >

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா காலமானார்... தலைவர்கள் நேரில் அஞ்சலி

Former-Congress-MLA-Yasodha-passed-away

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.


Advertisement

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1980, 1984, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் யசோதா. அண்மையில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த யசோதா, உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் புறப்பட்டுச் சென்றார்.

சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த யசோதாவுக்கு, சிறுநீரகக் கோளாறு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.


Advertisement

image

இதையடுத்து, யசோதாவின் உடல் சென்னை - கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துதில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த யசோதா, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை அறங்காவலராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close