[X] Close >

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா VS இந்தியா : இரண்டாம் நாள் ஆட்டம் எப்படி?

SECOND-DAY-ANALYSIS-OF-BOXING-DAY-TEST-BETWEEN-INDIA-VERSUS-AUSTRALIA-AT-MCG

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


Advertisement


Advertisement

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 91.3 ஓவர்களில் 277 ரன்களை ஐந்து விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. கேப்டன் ரஹானேவும், ஜடேஜாவும் களத்தில் விளையாடி வருகின்றனர். மயங்க், கில், புஜாரா என இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட தவறிய நிலையில் மொத்த பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு விளையாடினார் கேப்டன் ரஹானே. 


Advertisement

விஹாரி மற்றும் பண்டுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஹானே, ஜடேஜாவுடன் 104 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் மட்டும் மொத்தமாக ஐந்து கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலியா நழுவ விட்டுள்ளது. இதில் ரஹானேவின் கேட்சை இரண்டு முறை தவற விட்டுள்ளது அந்த அணி. 

இதன் மூலம் 195 பந்துகளில் சதம் விளாசினார் ரஹானே. மழை குறுக்கிட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக இரண்டாம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

நன்றி : BCCI, CRICKET AUSTRALIA

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close