வாணியம்பாடி அருகே உழவர் சந்தைக்கு காய்கறி ஏற்றி வந்த இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியை சேர்ந்தர்கள் பவுன் மற்றும் ராஜகுமாரி. இவர்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடி - ஆலங்காயம் செல்வம் சாலையில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சென்றபோது இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பவுன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும், அவரது உறவினரான ராஜ்குமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து. லாரி ஓட்டுநர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!