இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் ஓப்போ நிறுவனத்தின் புதுவரவான ரெனோ 5 புரோ 5ஜி போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சீனாவில் இந்த போன் அறிமுகமாகி இருந்தது. இந்திய தர நிர்ணய ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இந்த போனின் மாடல் நெம்பர் பட்டியலிடப்பட்டுள்ளதை வைத்து இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டில் இந்த போன் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
“துல்லியமான வீடியோக்களை படம் பிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் விரைவில். நிறைய பேசலாம். நிறைய தெரிந்து கொள்ளலாம்” என இந்த 5ஜி போனின் வருகை குறித்து மறைமுகமாக சொல்லும் வகையில் ட்வீட் செய்திருந்தார் ஓப்போ இந்தியாவின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு தலைவர் தஸ்லீம் ஆரீப்.
ஆண்டராய்ட் 11இல் இயங்கும் இந்த ரெனோ 5 புரோ 5ஜி போனில் 8ஜிபி முதல் 12ஜிபி வரை ரேம் இருக்கலாம் என தெரிகிறது. 4350 மில்லியாம்ப் பேட்டரியோடு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் சைடில் நான்கு கேமிராவும், முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமிராவும் இடம் பெற்றுள்ளது. 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இருப்பதாக தெரிகிறது.
#Innovation #Technology #5G
So much to talk, so much to know! Watch this space for something big coming soon??
Followed by some exciting and surprising gifts too?? pic.twitter.com/oNVf15QPQF— Tasleem Arif ?? (@tasleemarifk) December 21, 2020Advertisement
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?