சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம். கடந்த சுதந்திரத்தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமிர்தத்தை, ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் தடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளரும் தாக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்லப்பட்டதையெடுத்து ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம். இந்நிலையில் அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்துள்ளார்.
அதில் “ நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஜயகுமாரும், ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளிடம், இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க காலஅவகாசம் வேண்டும் என காவல்துறை கூறினர். இதனையடுத்து 2 வார காலாவகாசம் வழங்கிய நீதிபதிகள், அமிர்தம் மனு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?