கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி அந்தாதூன் படத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்டு வரும் புத்தாண்டு அன்று படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது ’அந்தாதூன்’ திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்க, நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கின் ஸ்பெஷல் வீடியோ கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இன்று மதியம் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஜொலிஜொலிக்கும் பின்னணியில் அமர்ந்து பிரஷாந்த் பியானோ வாசிக்கிறார். வீடியோ முடிவில் படத்தின் டைட்டில் வரும் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்கள்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்