[X] Close >

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

Producer-Five-Star-Kathiresan-to-turn-director-with-Lawrence-rudran

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தை, அப்படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை ‘லஷ்மி’யாக இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார்.  சமீபத்தில்தான் இப்படம் வெளியானது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ருத்ரன்’ என்று வெளியானது. ஜி,வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.


Advertisement

image

ஆனால், அப்போது இயக்குநர் யார் என்பதை சொல்லவில்லை. அனைவரும் ராகவா லாரன்ஸாகவே இருக்குமோ என்று நினைத்தனர். ஆனால், தற்போது இப்படத்தை தயாரிக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெற்றிபெற்ற ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் உரிமையையும் வாங்கி வைத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close