உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகாரளிக்க சென்றபோது, சப்-இன்ஸ்பெக்டரால் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில், ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்குள்ள காவல் துணை ஆய்வாளர் மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஏ.டி.ஜி.பி பரேலி அவினாஷ் சந்திரா, பெண்ணின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜலாலாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் 35 வயதான அந்த பெண் “ நவம்பர் 30 ஆம் தேதி, நான் மதான்பூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஐந்து ஆண்கள் ஒரு காரில் வந்து, பலவந்தமாக இழுத்துச் சென்று அருகிலுள்ள வயலில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் . இதுபற்றி புகாரளிக்க ஜலாலாபாத் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்” என தெரிவித்தார்.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்