இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படம் பொங்கலுக்கு ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து லக்ஷ்மண் –ஜெயம் ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும், விவசாயியாகவும் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 25 வது படமாக வெளியாகவிருப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து, ஜெயம் ரவி பேசும்போது, “பூமி திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இப்படம் திரைப்பயணத்தில் 25 வது படம் என்பதைத் தாண்டி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். உங்களுடன் நானும் திரையரங்கில் பார்த்து ரசிக்க நினைத்தேன். ஆனால், காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. பூமி திரைப்படம் உங்களை தேடி வீட்டிற்கே வரவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் உடன் இணைந்து உங்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குபெற நான் பெருமை கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்