[X] Close >

அமித்ஷா மகன் ஜெய் ஷா அணியிடம் தோல்வியை தழுவிய கங்குலி டீம்!

JAY-SHAH-TEAM-BEATS-GANGULY-TEAM-ON-THE-OCCASION-OF-BCCI-AGM-IN-AHMEDABAD

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89 வது ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சி, வாரியத்தின் எதிர்வரும் திட்டங்கள், ஐபிஎல் தொடரில் புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்க உள்ளனர் வாரியத்தின் உறுப்பினர்கள். இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்னர் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் வாரிய குழு உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடியுள்ளனர்.


Advertisement


Advertisement

பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஒரு அணியும், செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஒரு அணியும் விளையாடியுள்ளனர். குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மோர்டெரா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. 12 ஓவர் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்றது. 


Advertisement

முதலில் பேட் செய்த ஜெய் ஷா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கங்குலி அணி 12 ஓவர்களில் 100 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close