30 கிராம் எடையில் ஒரு ஆண்டி ஸ்மார்ட்ஃபோன்

30 கிராம் எடையில் ஒரு ஆண்டி ஸ்மார்ட்ஃபோன்
30 கிராம் எடையில் ஒரு ஆண்டி ஸ்மார்ட்ஃபோன்

உலகின் மிகச்சிறிய எலாரி நேனோ ஃபோன் C (Elari Nano phone C) மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ. 3,940 விலை கொண்ட இந்த ஃபோன், எர்கா தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் மிகச்சிறிய அதாவது கிரெடிட் கார்டு அளவிலான எலாரி நேனோ ஃபோன் C-இன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே. மிகவும் வசதியான ஸ்டைலான பட்டன்களுடன், நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த எலாரி நேனோ ஃபோன் C அளவு 94.4 மில்லிமீட்டர் நீளமும், 35.85 மில்லிமீட்டர் அகலமும், 7.6 மில்லிமீட்டர் தடிமனும், 30 கிராம் எடையும் கொண்டுள்ளது.
கருப்பு, ரோஸ் கோல்டு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ள இந்த மொபைல்ஃபோனின் டிஸ்பிளே 1 அங்குல 128×96 பிக்சல் தீர்மானத்துடன் டிஎஃப்டி பெற்றுள்ளது.

இந்தியாவில், ரூ. 3940 விலைக்கு கிடைக்கும் இந்த ஃபோன் C-ஐ Yehra.com-ல் வாங்கலாம்.

எலாரி நேனோ ஃபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த மொபைல் ஒரு ஆண்டி-ஸ்மார்ட்ஃபோன் (anti-smart)அதாவது, சமூக வலைதளங்கள், இணையம், போன்றவற்றில் இருந்து விலகி நிற்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் செய்வதற்கான மொபைலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com