பயிற்சி ஆட்டம் ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ஒரே ஓவரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 21 ரன்கள் விளாசினார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் அசத்தலாக விளையாடி வந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இன்றளவும் காத்து கிடப்பவர் சூர்யகுமார் யாதவ். உள்ளூர் போட்டிகளில் பல முறை தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டங்களே அவரை லைம் லைட்டில் கொண்டு வந்தது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 480 ரன்கள் குவித்து இருந்தார். அதில் 4 அரைசதங்களும் அடங்கும். அவரது அதிரடி காரணமாக சில போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. தன்னுடைய திறமையை பல இடங்களில் அவர் நிரூபித்த போதும் இந்திய அணியில் இடம் கிடைக்காது குறித்து அவரே அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில்தான், சூர்ய குமார் யாதவ் மீண்டும் லைம் லைட் செய்தியில் வந்துள்ளார். அதற்கு காரணம் உள்ளூர் பயிற்சி ஆட்டம் ஒன்றில் அவர் 47 பந்துகளில் 120 ரன்கள் விளாசியுள்ளதுதான். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ஒரே ஓவரில் அவர் 21 ரன்கள் குவித்தார். முதல் இரண்டு ஓவர்களை சூப்பராக வீசிய அர்ஜூன் டெண்டுல்கரின் மூன்றாவது ஓவரில்தான் சூர்யகுமார் விளாசி தள்ளிவிட்டார். இருப்பினும் டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார் அர்ஜூன். அவர் தான் வீசிய 4 ஓவர்களில் 33 ரன் விட்டுக் கொடுத்தார்.
சையது முஷ்டாக் டிராபிக்காக பயிற்சி ஆட்டம் ஒன்றில் சூர்ய குமார் யாதவ் மற்றும் யாஷ்வி ஜெய்ஷ்வால் தலைமையிலான அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில்தான் சூர்ய குமார் தன்னுடைய ருத்ரதாண்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சூர்ய குமாரின் அதிரடி காரணமாக அவரது அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
சூர்ய குமார் யாதவ் 2010 ஆம் ஆண்டுகளில் இருந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 77 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 5,326 ரன்கள் குவித்துள்ளார். அதில் 14 சதம், 26 அரைசதங்கள் அடங்கும். 93 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 2 சதம், 15 அரை சதங்களுடன் 2447 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன், 101 ஐபிஎல் தொடர்களில் 2024 ரன்களும் அடித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு