பெங்களூருவில் இணையதள செயலி மூலம் கடன் பெற்றவருக்கு அந்நிறுவனம் மிரட்டல் விடுத்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழையனூரைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் இதுபோன்ற பிரச்னையால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதள செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் கடன்பெற்ற அவர், குறித்த நேரத்தில் திருப்பி செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத்தினர் விவேக்கை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வந்துள்ளனர்.
மேலும், விவேக்கின் நண்பர்களுக்கும் அவர் குறித்து அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதால் மனஉளைச்சல் அடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் இணையதள செயலி மூலம் கடன்பெற்றவருக்கு, அவரது செல்போனில் இருந்து நண்பர்களின் எண்கள், புகைப்படங்களை எடுத்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் வட்டி செலுத்தக்கோரி மிரட்டல் விடுத்ததால் அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செயலி நிறுவனம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!