டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிலையை வைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி, கடந்த 1999 முதல் 2013-ம் ஆண்டுவரை டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராகப் பதவி வகித்தார். ஃபெரோஸ் ஷா கோட்லா எனும் பெயர் கொண்ட டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயர், அருண் ஜெட்லியின் நினைவாக அவருடைய மறைவுக்குப் பிறகு அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம் என மாற்றப்பட்டது.
அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜேட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜெட்லியின் நினைவாக அவருக்கு 6 அடியில் சிலை எழுப்பபடும் என சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஹோஹன் ஜேட்லிக்கு, பிஷன்சிங் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “ நான் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். ஆனால், நடக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் பொறுமை இழந்து விடுவேன் என அச்சப்படுகிறேன்.
தயவு செய்து அரங்கில் எழுதப்பட்டிருக்கும் என்னுடைய பெயரை நீக்கிவிடுங்கள். நான் டெல்லி கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். தீவிர ஆலோசனைக்குப் பின்புதான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
மரியாதை என்பது நாம் செய்யும் செயல்களிலும், பொறுப்புகளில் இருந்தும் கிடைக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால் அருண் ஜெட்லி மறைவுக்குப் பின் அவசரஅவசரமாக அவரின் பெயர் அரங்கிற்கு சூட்டப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை ஜெட்லி சிறந்த நிர்வாகியாக இருக்கவில்லை. அவரின் நிர்வாகத்தில் பல்வேறு தோல்விகள் இருந்தன, அவரின் முடிவுகளையும் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.
அருண் ஜெட்லி ஒரு அரசியல் தலைவர், அவரை நாடாளுமன்றம் நினைவுகூரலாம். மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் அரங்கிற்கு சாதனைப் படைத்த வீரர்களின் பெயர்கள்தான் வைக்கப்பட்டது. விளையாட்டுக்கு விளையாட்டுத் துறையில் சாதித்தவர்கள்தான் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
டெல்லி கிரிக்கெட் அமைப்பு உலகளாவிய கிரிக்கெட் கலாசாரத்தை புரிந்து கொள்ளவில்லை. நான் வெளியேறுவது அவசியம் என நினைக்கிறேன்’’ என அக்கடிதத்தில் பிஷன்சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்