பாகிஸ்தானியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் வளர்த்ததாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து.
கடந்த 2019 செப்டம்பர் மாதம் 6 அன்று ரிபப்ளிக் டிவியின் ஒரு செய்தி நிகழ்ச்சி பிரிட்டனில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் நிலவுக்குச் சென்ற சந்திரயான்-2 விண்கலன் குறித்து அர்னாப் கோஸ்வாமியுடன் சில பிரபலங்கள் பேசியது ஒளிபரப்பானது. இதில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பாகிஸ்தான் நாட்டுடன் ஒப்பிட்டு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு சிலர் பாகிஸ்தானைப் பற்றியும் அந்நாட்டு மக்களைப் பற்றியும் தகாத வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது. அவர்கள், ”பாகிஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகள். அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதிகள்” என வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக விமர்சித்துள்ளதாக பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை புகார் பதிவு செய்துள்ளது.
மேலும் அர்னாப் கோஸ்வாமி, “நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். அவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்.’ எனக் கூறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையொட்டி பிரிட்டனில் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகளை ஒளிபரப்பும் ஓர்ல்ட் வைட் மீடியா நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை 20 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம் ஆகும். அத்துடன் இது குறித்து ரிபப்ளிக் டிவி நிபந்தனை அற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?