நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் ’நெற்றிக்கண்’ படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார், விக்னேஷ் சிவன். அடுத்ததாக ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை தயாரித்துவரும் இந்த ஜோடி, இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான் கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘கூழாங்கல்’ படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து, இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்,
“மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ’கூழாங்கல்’ என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள் இயக்கநரால் எடுத்தப்பட்ட இப்படத்திற்கு தன்னுடைய பின்னணி இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச விழாக்களுக்கும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம்.
உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு