ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்து பிரிந்த நிலையில், விவாகரத்து கேட்டு வந்த மனைவியை கணவரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் டிரைவராக உள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்தவர் சிவபாலா. இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. மாலை கல்லூரியில் படித்து வந்த சிவபாலாவும், டிரைவராக இருந்த சரவணனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
இதையடுத்து சரவணன் அவரது மனைவி சிவபாலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரவணன் பலமுறை தன்னுடன் வந்து வாழுமாறு சிவபாலாவிடம் ஊர்மக்களை வைத்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிவபாலா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும், சிவபாலா சரவணனுடன் வாழப்பிடிக்கவில்லை எனக்கூறி விவாகரத்து கோரியிருந்தார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சிவபாலா எஸ்பி அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்த சரவணன், மனைவி சிவபாலாவை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் தப்பியோடிய சரவணனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?