வழக்கமாக கிரிக்கெட் களத்தில் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது ஒரே மாதிரியான ஸ்டான்ஸில் ஆர்தடாக்ஸ் முறையில் விளையாடுவது வழக்கம். உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை பேட்ஸ்மேன்கள் ஆர்தடாக்ஸ் முறையில் கோடு போட்டதை போல ஒரே ஸ்டான்சில் நிற்பது வழக்கம். அத்தி பூத்தது போல ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டும் வாழக்கத்திற்கு மாறான பேட்டிங் ஸ்டான்ஸில் விளையாடுவர்.
அவர்களில் ஒருவர் தான் பாகிஸ்தானின் ஃபாவத் அலாம். தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சாளரை நோக்கி நின்றபடி இவர் விளையாடிய படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த ஆட்டத்தில் அவர் சதம் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.
Fawad Alam scored 139 runs with this batting stance against New Zealand A. pic.twitter.com/IJlFV0YHZH — Cricketopia (@CricketopiaCom) December 20, 2020
“எனக்கு தெரிந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் வலது கை பேட்ஸ்மேனாக மாறிவிடுவார்” என ரசிகர் ஒருவர் அலாமின் ஆட்டத்தை கமெண்ட் செய்துள்ளார். அலாம் இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகில் வித்தியாசமான பேட்டிங் ஸ்டான்ஸிற்காக பரவலாக அறியப்படுபவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பால்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?