அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவிய நிலையில், வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது போட்டி ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியோடு கோலி இந்தியா திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு முதல் போட்டியில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் அவர்கள் இருவருக்கும் மாற்றாக கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவது உறுதி என்றாலும், நான்காவது அல்லது ஐந்தாவது பேட்ஸ்மேனா என்பது மட்டும் தெளிவாகவில்லை. அதேபோல இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் மெல்பேர்ன் டெஸ்டில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சைனி அந்த இடத்திற்கு போட்டி போடுகிறார்.
பிருத்வி ஷா: இந்திய அணிக்காக முதல் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறிய பிருத்வி ஷாவுக்கு மாற்றாக மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் ஆடும் லெவனில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். முதல் போட்டியில் பிருத்வி ஷாவை சேர்த்தபோதே இதை சொல்லியிருந்தனர். அதேபோல விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு மாற்றாக பண்ட் மெல்போன் போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு