[X] Close >

‘புற்றுநோய் இருப்பதாக கூறி 1.47 கோடி ஏமாற்றிவிட்டார்’ - மருத்துவர் மீது பெண் புகார்

Pune-Woman-told-by-doctor-she-has-cancer-cheated-of-Rs-1-47-crore-in-bogus-treatment

மகாராஷ்டிராவில் கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி பெண்ணிடம் 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

image


மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், சுஷ்மா ஜாதவ் என்ற 58 வயது பெண் பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வனாவடி காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் ஒன்றை அளித்தார்.


Advertisement

அந்த புகாரில், “வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் எனக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அவரின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் மூலம் ஜாதவ் மருத்துவருக்கு அறிமுகமானதும், அதனைத் தொடர்ந்து அவருக்கு முழங்கால் வலி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் உடல்பிரச்னை சம்பந்தமாக கோண்ட்ராஸ் அணுகிய போது, மருத்துவர் வேறு இடத்தில் கனடாவை மையமாக கொண்டு செயல்படும் ஆயுர்வேத நிலையத்தில் பல நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து வந்ததும் தெரியவந்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close