மதுரை அருகே +2 படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 8 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளரான தங்கபாண்டி (27) வாலிபருக்கு திருமணமாகி 8 ஆண்டுகளான நிலையில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் குழந்தை இல்லாத தங்கபாண்டி, தனக்கு திருமணமானதை மறைத்து பக்கத்து ஊரைச் சேர்ந்த +2 படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பழகி வந்துள்ளார். தங்கப்பாண்டி அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பல்வேறு தனிமையான இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். இதனால் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்
சிறுமியின் உடலில் மாற்றத்தை கண்டறிந்த பெற்றோர் இதுவரையில் உடல் உபாதை என எண்ணி வந்துள்ளனர். தற்போது மிகுந்த சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில் இது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித் போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் தங்கப்பாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!