ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த முடிந்த இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதை செய்யத் தவறியதே தோல்விக்கு காரணம். இந்நிலையில் நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
“ஒரு அணி அதன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டாவது நல்லதற்கு அல்ல. ஆனால் எதிரணியின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்கின்ற ஒரு அணியால் பெரிய ரன்களை எடுக்க முடியாது. 36 மாதிரியான குறைந்த ஸ்கோர் இல்லை என்றாலும் 80 - 90 ரன்கள் வரைதான் எடுக்க முடியும். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு அசத்தலாக இருந்தது. அதனால் நம் பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எதுவும் இல்லை. அப்படி சொல்வது நியாமும் இல்லை” என சொல்லியுள்ளார் கவாஸ்கர்.
இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களை, கடந்த 1974 லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்திருந்தது. அந்த அணியில் கவாஸ்கரும் இடம் பெற்றிருந்தார்.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி