சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
திறந்தவெளியில் 50 சதவிகிதம் பேர் வரை பங்கேற்கும் விதமாக, அரசியல், மதம், கல்வி சார்ந்த கூட்டங்களை நேற்று முதல் நடத்திட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த ஊரான எடப்பாடியிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களும் பங்கேற்பர் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அதன்பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அது, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பரப்புரை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு" என்ற பெயரில் அந்தப் பரப்புரைப் பயணம் இருக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக காலை முதலே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். பேனர்கள், கோஷங்கள் என அறிவாலயம் களைகட்டியது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?