டெலிட் ஆப்ஷனை நீக்கியுள்ள பேஸ்புக், அதற்கு பதிலாக ’Move to Trash’ என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.
பயனர்களுக்கு புதிது புதிதாக அடிக்கடி அப்டேட் கொண்டு வருகிறது பேஸ்புக். சில அப்டேட்கள் வரவேற்பை பெற்றாலும், சில அப்டேட்களை பயனர்களுக்கு பிடிக்காதவையாகவே உள்ளன. ஆனாலும் பயனர்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு அம்சங்களையும் கணக்கில்கொண்டு அப்டேட் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் புதிய அப்டேட்டாக டெலிட் ஆப்ஷனை நீக்கியுள்ளது பேஸ்புக். அதற்கு பதிலாக ’Move to Trash’ என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.
பேஸ்புக்கில் நாம் பதிவிட்ட போஸ்டை டெலிட் செய்யும் ஆப்ஷன் இருக்கும். ஆனால் தற்போது அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பேஸ்புக். டெலிட்க்கு பதிலாக 'Move to Trash' என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. உங்கள் பேஸ்புக் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய அப்டேட் கிடைக்கிறது. மேலும், 'Trash'ல் கொண்டு செல்லப்படும் போஸ்டுகள் 30நாட்களுக்கு பிறகு டெலிட் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே நாம் குறிப்பிட்ட போஸ்டை டெலிட் செய்ய வேண்டுமென்றால்,' Move to Trash'கொடுத்த பிறகு 'Settings' ஆப்ஷன் சென்று, 'Activity Log'ல் இருக்கும் குறிப்பிட்ட போஸ்டை டெலிட் செய்யலாம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த ஆப்ஷன் கடினமான ஒன்று என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் தவறுதலாக டெலிட் ஆனாலும் நம் பதிவை மீட்க முடியும் என்பதால் இது பாதுகாப்பான ஒன்று எனவும் ஒருதரப்பினர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி