‘கடவுளின் தேசமான’ கேரளாவில் அண்மையில் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை போலவே இந்த முறையும் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாஜக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பாஜக இரண்டு நகராட்சிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதில் பாலக்காடு நகராட்சியில் உள்ள 52 சீட்டுகளில் 28 சீட்டை பாஜக கைப்பற்றியது. அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக-வினர் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் படங்கள் அடங்கிய பேனர்களை தொங்கவிட்டதோடு அதில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என மலையாளத்தில் எழுதியும் இருந்தனர்.
பாஜக நிர்வாகிகளின் கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி இருந்தது. அவர்களது கொண்டாட்டம் சர்ச்சையாக வெடித்து, பலர் அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்ததே காரணம். இந்த சர்ச்சையை தொடர செய்யும் வகையில் ‘பாலக்காடு கேரளாவின் குஜராத்’ என கேப்ஷன் போட்டு வெற்றி கொண்டாட்டத்தின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகரிந்திருந்தார் பாஜக மாநில செயலாளர் சந்தீப் ஜி.வாரியர்.
இது தொடர்பாக போலீசார் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியான DYFI இன்று காலை பாலக்காடு பகுதியில் ஊர்வலமாக சென்று பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் பேனரை வைத்திருந்த அதே இடத்தில் மூவர்ணக்கொடியை பறக்க விட்டதோடு வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பி பாஜகவினருக்கு பதிலடி கொடுத்தனர். நகராட்சி அலுவலகம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அல்ல எனவும் ஊர்வலத்தில் கோஷங்கள் எழுந்தன.
This is not RSS Karyalay, this is municipal office.
This is not Guajarat, This is Kerala. pic.twitter.com/7eKOqAv4cg — Halla Bol (@e_salam) December 18, 2020
“வட மாநிலங்களில் பாஜகவினர் தங்களது ஆளுமைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சுவருக்கு காவி நிறம் பூசி ஆங்காங்கே ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பலாம். சில இடங்களில் மதம் சார்ந்த தலைவர்களின் படங்களை பதாகையாகவும் வைக்கலாம். ஆனால் இது கேரளா. மதச்சார்பற்ற மக்களால் அது மாதிரியான ஊர்வலங்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பாஜக பாலக்காட்டில் வெற்றி பெற்ற காரணத்தினால் மதச்சார்புடைய சின்னங்களை வைத்து விட முடியாது” என சொல்கிறார் DYFI மாவட்ட செயலாளர் சசி.
நன்றி : THE NEWS MINUTE
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி