இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் முதல் இன்னிங்ஸில் குவித்துள்ளன. இந்திய அணி இந்த ஆட்டத்தில் 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணி பந்து வீசிய போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடது காலில் கிழிந்த ஷுவை அணிந்து கொண்டு விளையாடினார். அதை கவனித்த கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பகிர்ந்திருந்தனர். இதனிடையே, ஷமி ஏன் கிழிந்த ஷுவை அணிந்து கொண்டு பந்து வீசினார் என்பதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே விளக்கம் கொடுத்துள்ளார்.
“இது அவரது ஆட்டத்தின் வியூகம் என்று சொல்லலாம். பந்தை ரிலீஸ் செய்யும் போது சரியான லேண்டிங் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஷமி இதை செய்துள்ளார். HIGH ARM பவுலிங் ஆக்ஷனில் ஷமி பந்து வீசுகிறார். அப்படி அவர் பந்தை ரிலீஸ் செய்யும் போது எந்தவித இடம்பாடும் ஏற்படக் கூடாது என்பதற்காக ஷமி இதை செய்திருக்கலாம்” என வார்னே தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 17 ஓவர் வீசியுள்ள ஷமி 41 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதில் நான்கு மெய்டன் ஓவர்களும் அடங்கும். விக்கெட் வீழ்த்த தவறி இருந்தாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அவர் கட்டுப்படுத்தி இருந்தார். அணிக்காக ஷமியின் அர்ப்பணிப்பை பார்த்து அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு