இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விளக்கமளித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட்டின் நியமனம் போன்றதே ஜாகீர்கான் நியமனமும் என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் தாமாக முன்வந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உதவிய சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு எந்தவிதமான ஊதியமும் பெறவில்லை என்றும் பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரிடம் ஆலோசனைக் கேட்கப்பட்ட பின்னரே இந்திய் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, பயிற்சியாளர் குறித்து அறிவித்த பிசிசிஐ, ஜாகீர்கானை முழுநேர பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்படுவார் என்றே தெரிவித்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்