குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் வேளாண்சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது. வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது.
வேளாண் சட்டங்கள் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும். விவசாயிகளுக்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்துறை- விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்கள் கொண்டுவந்ததற்காக நன்றி சொல்ல வேண்டாம். நலமுடன் இருந்தாலே போதும்” என்றார்.
அத்துடன், “விவசாய விலை பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களுக்காக சுவாமிநாதன் குழு அள்த்த பரிந்துரையின் பேரில் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'