ஆஸ்திரேலிய பந்துவீச்சில் திணறிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் விருத்திமான் சகா 9 ரன்களும், ஆர்.அஸ்வின் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளான இன்று, 15 ரன்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அஸ்வினை தொடர்ந்து சாஹா 9, உமேஷ் யாதவ் 6, ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை அடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?