பிரதமரிடம் நேரில் அழுத்தம் கொடுங்கள்: முதலமைச்சருக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது 68-வது பிறந்த நாளை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். இதனால் காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வீட்டிற்கு வந்து சால்வைகள் போர்த்தி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர், பாரதிய ஜனதாவின் 3 ஆண்டு ஆட்சியில் மீனவர்களின் ஒரு படகு கூட மீட்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். மீனவர் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் நேரில் சென்று பிரதமருக்கு நேரில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement