தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக தடைபட்டிருந்த இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு பணிகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கின. அதன்படி, பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சற்று முன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆறு உந்து சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், சிஎம்எஸ் 1, விண்ணுக்கு செல்லும் 42வது செயற்கை கோள்களாகும். 1400 கிலோ எடை கொண்டது இந்த சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள். இதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளாகும்.
வானிலை பயன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட c band அலைக்கற்றை தேவைகளுக்காகவே இந்த சிஎம்எஸ் 1 அனுப்பப்படுகிறது. தகவல் தொடர்புக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்ட நிலையில், அதற்கு மாற்றாகவே சிஎம்எஸ் 1 தற்போது செலுத்தப்பட்டுள்ளது
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?