டெல்லி எல்லையில் உள்ளூர் குடிசைவாழ் குழந்தைகளுக்கான தற்காலிகமாக பள்ளி ஒன்றை நடத்த துவங்கியுள்ளனர், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் முகாமிட்டிருப்பதால் டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், அங்கு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சிலர், குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்காக தற்காலிகமாக பள்ளி ஒன்றை நடத்த துவங்கியுள்ளனர். 'டென்ட்' அமைத்து, அதில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
படம் உறுதுணை: TOI
இதுகுறித்து தன்னார்வலரான சத்னம் சிங் கூறுகையில், ''அண்டை குடிசைப் பகுதிகளிலிருந்து இருந்து ஏராளமான குழந்தைகள் உணவுக்காக சுற்றித் திரிவதை நாங்கள் கண்டோம். மேலும் ஆக்கபூர்வமான வழியில் ஈடுபட அவர்களுக்கு ஏன் உதவக்கூடாது என்று நினைத்தோம்.
குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தினமும் உணவுக்காக போராட்டம் நடத்தும் இடத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு உணவளிப்பதுடன், பாடமும் நடத்தலாம் என்ற எண்ணத்தில் தற்காலிகப் பள்ளியைத் துவக்கியுள்ளோம். போராட்டம் முடியும் வரை இந்த சேவை தொடரும்.
படித்த விவசாயிகள், இளங்கலை, பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள். இந்த தற்காலிக பள்ளியில் ஏற்கெனவே 60-70 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு வந்து கதைகளைப் படிக்க, எழுத, வரைய மற்றும் வகுப்புகளை கவனிக்கிறார்கள்’’ என்றார் அவர்.
மேலும் திக்ரி எல்லையில் உள்ள போராட்டக்களத்திலும் இதேபோன்ற தற்காலிக பள்ளி வசதியை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தகவல் உறுதுணை: indiatoday.in
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?