[X] Close >

சபரிமலையில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி

Permission-for-5000-devotees-daily-in-Sabarimala

சபரிமலையில் வரும் 20ஆம் தேதி முதல் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.


Advertisement

சபரிமலையில் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதால் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 10 - 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ்களும், மலையேறும் உடற்தகுதி சான்றிதழ்களும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார நாட்களில் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

52-year-old prevented from entering Sabarimala temple by frenzied devotees


Advertisement

இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வாரநாட்களில் 2000 பேருக்கும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 3000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 20 ஆம் தேதிமுதல் தினமும் தரிசனத்திற்கு வரும் 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவசம் போர்டு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close