நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பெண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார்.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலமாக உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள், 151 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தனக்கும் தனது மனைவி சாரா ரஹீமுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார், 30 வயதான கேன் வில்லியம்சன்.
மனைவியின் பிரசவத்திற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வில்லியம்சன் விளையாடவில்லை. மேலும் வரும் வெள்ளியன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு