[X] Close >

ராமநாதபுரம்: ஆசிரியரின் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா? போலீசார் விசாரணை!

Is-credit-harassment-the-reason-for-the-teachers-suicide-Police-investigation

ராமநாதபுரம் மாவட்டம் அக்காள் மடத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

image
ராமநாதபுரம் மாவட்டம் அக்காள் மடத்தை சேர்ந்தவர் பூமாரியப்பன். இவர், தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு பேர், ஆசிரியர் பூமாரியப்பனை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஆசிரியரின் மனைவியிடம் தங்கள் கணவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், வட்டியும் அசலும் சேர்த்து ரூ. 60 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறியும் தகறாறு செய்ததாக தெரிய வருகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கூட்டமாக கூடவே, பணம் கேட்டு வந்தவர்கள் வட்டியும் முதலும் தரவில்லையெனில் அசிங்கமாகிவிடும் எனக்கூறி திரும்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டுக்கு வந்த கணவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வந்து சென்றதாகக்கூறி பணத்தை என்ன செய்தீர்கள் என மனைவி கேட்டதால் கணவன் மனைவி இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.


Advertisement

image


இதனைத்தொடர்ந்து இன்று காலை வீட்டிற்குள் கணவரை காணாததால் மனைவி வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் இருந்த பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து தங்கச்சிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக்கைப்பற்றி உடல் கூறு சோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close