பீகாரில் மனைவியை ‘பந்தயமாக’ வைத்து சூதாடிய நபர், சூதாட்டத்தின் தோற்றபின்னர், தன் மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான 36 வயது நபர், தனது மனைவியை பந்தயம் கட்டி தனது நண்பர்களிடம் இழந்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அந்தபெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது மனைவி ஆஷாவை (பெயர் மாற்றப்பட்டது) பல முறை பாலியல் வன்கொடுமை செய்ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார். சமீபத்திய சூதாட்டத்தின்போது, தனது மனைவியை ‘பந்தயம்’ கட்டி தன் நண்பர்களிடம் அவளை இழந்தார்.
அந்த பெண், அவனின் நண்பர்களுடன் செல்ல மறுத்தபோது, அவன் மனைவி மீது ஆசிட்வீசி தாக்க முயன்று, தன் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளான். பின்னர் அந்த பெண் தனது கணவனின் வீட்டிலிருந்து தப்பி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, தீபக் சிங் என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆஷாவுக்கும் ரவிக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன, ஆனால் ரவியின் குடிப்பழக்கம் காரணமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கருத்தரிக்க முடியாததால் ரவி தன்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்வதாக ஆஷா போலீசாரிடம் தெரிவித்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு