புதுச்சேரி சார்பில், 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான படம் 'ஒத்த செருப்பு'. கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்றது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இவரது இந்த பரீசார்த்த முயற்சிக்கு பலரது தரப்பிலும்க் இருந்து பாராட்டுகள் கிடைத்தது.
இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் ஒத்த செருப்பு திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் 'gully boy' திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இது குறித்தான அதிருப்தியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் நவாஸுதீன் நடிக்க இருப்பதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநரும், நடிகருமான பார்த்திபனுக்கு புதிச்சேரி அரசு சார்பில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் விருது வழங்க பார்த்திபன் பெற்றுக்கொண்டார்
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ