மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 4 லட்சத்திற்கு விற்கப்பட்டு பாலியல் வன்கொடுமை ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை நேற்று மாலை போபாலிலிருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்.பி, “உஜ்ஜைனில் வசிக்கும் சிறுமியை நவம்பர் மாதம், ராஜஸ்தானை சேர்ந்த உதய்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப் போவதாக பெற்றோர் சொன்னபோது, அந்த சிறுமி ஆட்சேபனை தெரிவித்தாள். ஆனால் அவளுக்கு நவம்பர் 24 ஆம் தேதி உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்த அந்த நபருடன் விட்டுவிட்டு பெற்றோர் மீண்டும் உஜ்ஜைனிக்கு வந்தனர். அதன்பின் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது பெற்றோர் ரூ .4 லட்சத்திற்கு அச்சிறுமியை தன்னிடம் விற்றதாகவும் கூறினார் அந்த நபர்.
டிசம்பர் 8 ம் தேதி, அந்த சிறுமி ஒரு முறை தனது பெற்றோரைப் பார்க்க உஜ்ஜைனுக்கு அழைத்துச் செல்லும்படி அந்த நபரிடம் கேட்டார், அதைத் தொடர்ந்து அந்த நபர் அவளை உஜ்ஜைனிக்கு அழைத்து வந்தார். நேற்று அவர் அவளை மீண்டும் உதய்பூருக்கு அழைத்துச் செல்ல முயன்றார், ஆனால் அச்சிறுமி தனது அத்தையை தொடர்பு கொண்டு இந்த நடந்த விபரங்களை கூறினார். தொடர்ந்து அச்சிறுமியின் அத்தை எங்களுக்கு தகவல் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்
அந்த பெண்ணின் தந்தை, திருமணம் செய்த நபர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மீது 370 (அ) (கடத்தப்பட்ட நபரைச் சுரண்டுவது), 372 (2) (விபச்சார நோக்கத்திற்காக விற்பனை செய்வது) மற்றும் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்ஸோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?