பங்களாதேஷில் பங்கபந்து டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகிர் ரஹீம் சக வீரர் ஒருவரை அடிக்க கையை ஓங்கிய வீடியோ இப்போது வரைலாகி வருகிறது.
பங்கபந்து டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டியில் தாக்கா - பரிஷல் அணிகள் மோதியது. தாக்கா அணிக்கு கேப்டன், விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகிர் ரஹீம். அப்போது 17 ஆவது ஓவரின்போது பரிஷல் அணி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல். பரிஷல் அணியின் அபீஃப் ஹசைன் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது 17 ஆவது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹூசைன் தூக்கியடிக்க அது எட்ஜ் ஆகி பந்து மேலே சென்றது, அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்தப் பந்தை பிடிக்க பீல்டரான நசும் ஓடி வர இருவரும் மோதிக்கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதியாக அந்த கேட்சை ரஹீம் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார், கண்டபடி வசைபாடினார். பின்பு சக வீரர்கள் ரஹீமை சமாதாப்படுத்தினர்.
Calm down, Rahim. Literally. What a chotu ??
(? @imrickyb) pic.twitter.com/657O5eHzqn — Nikhil ? (@CricCrazyNIKS) December 14, 2020
இறுதியாக டாக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ஆனாலும் பங்களாதேஷ் தேசிய அணியின் முக்கிய வீரரரும், மூத்த வீரருமான ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு